சொந்த அக்கா மகன் திருமணத்தில் அவமானப்படுத்தப்பட்ட ஷகிலா.. கண்ணீருடன் வெளியேற்றம்

Tamil Cinema Shakeela Actress
By Bhavya Apr 07, 2025 06:30 AM GMT
Report

ஷகிலா

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷகீலா. இவர் 1994ஆம் ஆண்டு சினிமா துறையில் என்ட்ரி கொடுத்தார். இவர் நடித்த முதல் படமே அடல்ட் திரைப்படம் என்பதால், இவர் மீது அடல்ட் நடிகை எனும் முத்திரை குத்தப்பட்டது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த நடிகை ஷகீலாவிற்கு அதிக அன்பு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷகீலாவுடைய அடையாளமே மாறியது.

சொந்த அக்கா மகன் திருமணத்தில் அவமானப்படுத்தப்பட்ட ஷகிலா.. கண்ணீருடன் வெளியேற்றம் | Shakeela Open Up About Her Sister Son Marriage

திருமணத்தில் அவமானம்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தன் அக்கா மகன் திருமணத்தில் அவர் அவமானப்படுத்தப்பட்டது குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " என் அக்காவின் மகன் திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணப்பெண் நான் மேடைக்கு வந்தால் இருக்க மாட்டேன் என கூறியுள்ளார். இந்த விஷயம் எனக்கு தெரியாது.

சொந்த அக்கா மகன் திருமணத்தில் அவமானப்படுத்தப்பட்ட ஷகிலா.. கண்ணீருடன் வெளியேற்றம் | Shakeela Open Up About Her Sister Son Marriage

நான் மேடைக்கு சென்றேன். எனது அக்கா மகன் எனது முகத்தைக் கூட சரியாக பார்க்கவில்லை. நான் கொடுத்த கிஃப்ட்டை இடது கையில் வாங்கி, அப்படியே பின்னாடி கொடுத்துவிட்டார்.

எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. நான் மணமேடையில் இருந்து அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறினேன்" என்று தெரிவித்துள்ளார்.