அடச்சீ காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவியா!! பேட்டியில் வெளுத்து வாங்கிய நடிகை ஷகீலா..
மலையாள சினிமாவின் கவர்ச்சி கன்னியாக 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை ஷகீலா. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான ஷகீலா தமிழில் கிளாமர் ரோலில் நடித்து வந்தார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை புதுவிதமாக்கி கொண்டார். சமீபகாலமாக யூடியூப் சேனல்களில் பேட்டியெடுத்து வந்த ஷகீலா, தன் பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்தும் பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் டிக்டாக் மூலம் பிரபலமான திவ்யா கல்லச்சி என்பவரை பேட்டியெடுத்து வெளுத்து வாங்கியுள்ளார். கார்த்தி மாமா ஐ லவ் யூ என்று கூறிக்கொண்டு அலைந்து பிரபலமானவர் திவ்யா. கார்த்தி என்பவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி டிக்டாக் வீடியோவில் பகிர்ந்து வைரலானார். டிக்டாக் தற்போது இல்லை என்பதால் யூடியூப் பக்க வந்த அலப்பறை செய்த திவ்யா, இரண்டு மாதத்திற்கு முன் தேனி ஈஸ்வரனை திருமணம் செய்து ஆட்டம் பாட்டத்துடன் இருந்துள்ளார்.
ஏற்கனவே குழந்தை இருக்கும் நிலையில் ஈஸ்வரனை திருமணம் செய்தது சர்ச்சையாகியது. இதுகுறித்து ஷகீலா பேட்டியில் கலந்து கொண்ட திவ்யாவிடம் பல கேள்விகள் கேட்டு கடுப்பாகி இருக்கிறார் நடிகை ஷகீலா. கண்டெண்டுக்காக தான் அதை செய்தோம் என்றும் தேனி ஈஸ்வரனை பிரபலமாக்க என்னிடம் கேட்டார்.
அதற்காக தான் என் வாழ்க்கையை பணயம் வைத்து அப்படி நடித்தோம் என்றும் என் மேல் கேஸ் இருக்கும் போது எனக்குன்னு யாரும் வரல, எனக்கு பணம் தேவைப்பட்டதால் தான் இந்த கல்யாண வீடியோவை பண்ணி காசு சம்பாதித்தேன் என்று கூறியிருக்கிறார்.
இதை கேட்ட நடிகை ஷகீலா, அடச்சீ, நீ என்ன நடிகையா? அசிங்கமா இல்லையா உனக்கு, காசுக்கொடுத்த என்ன வேணாலும் பண்ணுவியா என்று சரமாறியாக கேட்டுள்ளார். தயவு செய்து வெளிலபோ என்னால உன்னோடு பேசமுடியாது என்று அனுப்பி வைத்திருக்கிறார் நடிகை ஷகீலா.
மேலும் என்னதான் பொய் சொல்லி வீடியோ போட்டாலும் மக்கள் பாக்கத்தான் செய்வாங்க என்று திவ்யா பேசியதால் கடுமையாக திட்டி கேவலப்படுத்தியிருக்கிறார் நடிகை ஷகீலா.
