ஷாலினி போட்ட பிளானால் எல்லாம் போச்சா? அஜித்தால் இயக்குனருக்கு ஏற்பட்ட்ட பரிதாபம்..
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் அஜித் - ஷாலினி. சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அஜித்தின் கதை தேர்வால் அவரது மனைவி ஷாலினியே படத்தின் கதையை கேட்டு சிபாரிசு செய்வாராம். அப்படி தீரன் அதிகாரம் படத்தை பார்த்த நடிகை ஷாலினி அஜித் இப்படியான படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் படத்தின் வெற்றியை கண்டு ஷாலினி எச் வினோத் இயக்கத்தில் நடிக்க கண்டீசன் போட்டுள்ளாராம். அதன்படி நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் அஜித் 61 படமும் அமைந்தது. இந்த முடிவால் அஜித்தையே நம்பியிருந்த இயக்குனர் விஷ்ணுவர்தன் பாதித்துள்ளாராம்.
பில்லா ஆரம்பம் போன்ற படத்தின் வெற்றியை கொடுத்த விஷ்ணுவர்தன் அஜித்திற்காக ஒரு கதை கூறி அஜித்தும் ஓரளவிற்கு கதை ஓகே என்று கூறி கூட்டணியை தொடங்க முடிவேடுத்தாராம். ஆனால் இடையில் ஷாலினி எச் வினோத்தை கைக்காட்ட அங்கு செல்ல வேண்டியதாகிவிட்டதாம்.
எப்போது அஜித் 3 முறை தன்னுடைய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார். சிறுத்தை சிவா, எச் வினோத் போன்றவர்களுக்கு 3 படங்களை கொடுத்த அஜித் விஷ்ணுவர்தனுக்கு அடுத்த மூன்றாம் படத்தை கொடுப்பாரா என்று காத்து வருகிறார்கள் ரசிகர்கள்.