"முடிவுக்கு வந்த 8 வருட உறவு".. ஆண் நண்பரின் பகீர் செயலால் நடிகை ஷம்மு ஷாலு வேதனை!
தமிழ் சினிமாவில் காமெடி காதாபாத்திரத்தில் நடித்து பின்னர் கவர்ச்சி ரோல்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஷாலு ஷாமு. இவர் சிவகார்த்திகேயனின் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து இவர் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டுப்பயலே 2 என சில படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஷாலு ஷாமு இரவு பார்ட்டிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர் பார்ட்டி முடிந்த உடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது மொபைல் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. இது குறித்து ஷாலு ஷாமு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தொலைந்துபோன அவருடைய ஐபோன் தன் வீட்டிற்கு பார்சலில் வந்துள்ளது என்றும் அந்த மொபைல் போனை திருடியது அவரின் நண்பர் தான் என்று தெரியவந்துள்ளது.
தற்போது ஷாலு ஷாமு, 8 வருட நட்பு வீண் போனது என்று சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.