நடிக்க வேண்டாம்னு கூறிய சங்கர்! அடம்பிடித்த மகள் அதிதி
தமிழ் சினிமாவில் குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. கிராமத்து கதைகளத்தோடும் வீரத்தோடும் அமையும் படத்தை எடுத்து வருகிறார்.
தற்போது நடிகர் கார்த்தி, சங்கர் மகள் அதிதி சங்கரை வைத்து விருமன் படத்தினை இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து அதன் பர்ஸ் லுக் புகைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில்.
பெண் பிள்ளைகளை பெண்ணாக வளர்க்க வேண்டும். செல்ஃபி எடுத்து புகைப்படத்தை போட்டால் நான் திட்டச்செய்வேன். என்னை பழமைவாதி என்று கூறினால் ஆமாம் என்று தான் கூறுவேன்.
சங்கர் மகள் எனக்கும் மகள் தான் என்று கூறியுள்ளார் இயக்குனர் முத்தையா. ஆனால் விருமன் படத்தின் தேன்மொழி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, சாய்பல்லவி, கீர்த்தி சுரேஷ் தான் முதலில் தேர்வு செய்திருந்தேன்.
அதன்பின் தான் சங்கர் சார் மகள் அதிதியை தேர்வு செய்தேன். அதேபோல் சினிமாவில் நாம் நினைத்த கதையை எடுக்க முடியாது. பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்றதுபோல் கதையை மாற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.