நடிகையாகி படமே வெளியாகல அதுக்குள்ள கல்யாணமா? மகள் விஷயத்தில் சங்கர் எடுத்த முடிவு?

marriage daughter shankar karthi viruman aditishankar
By Edward Mar 30, 2022 08:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் இயக்குனர் சங்கர். ஜென் டில் மேன் படத்தின் மூலம் பெரிய வெற்றியை கொடுத்த சங்கர், முதல்வன், அந்நியன், நண்பன் எந்திரன், 2.0 போன்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்ற சங்கர் ராம் சரண், கியாரா அத்வானியை வைத்து பிரம்மாண்ட படத்தை எடுத்து வருகிறார்.

முதல்மகள் திருமணம்:-

கடந்த ஆண்டு முதல் மகளான ஐஸ்வர்யா சங்கருக்கும் கிரிக்கெட் கிளப் ஓனரின் மகன் கிரிக்கெட் வீரர் ரோஷித் தாமோதரனுக்கும் பிரம்மாண்ட் முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முதலமைச்சர் உட்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்திச்சென்றனர்.

இளைய மகள் சினிமா அறிமுகம்:-

இதன்பின் இந்தியன் 2, ஆர்சி15 படங்களில் கவனம் செலுத்தி வந்த இயக்குனர் சங்கர் தன் இரண்டாம் மகள் அதிதி சங்கரை சினிமாவில் நடிகையாக அறிமுகப்படுத்தினார்.

அவர் நடித்த முதல் படமாக நடிகர் கார்த்தியின் விருமன் படத்தில் ஜோடியாக கமிட்டாகினார். படத்தின் ஷூட்டிங் முடிந்து விரைவில்மற்ற வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

அதிதி திருமண முடிவு:-

மருத்துவப் பட்டப்படிப்பை முடித்திருந்த அதிதி சங்கர் சினிமா ஆசை இருந்ததால், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது முதல் படம் நடித்து முடித்த நிலையில் இயக்குனர் சங்கர், அதிதிக்கு கல்யாணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் அதற்கான பத்திரிக்கை கொடுக்கும் பணியில் சங்கர் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சங்கர், தயாரிப்பாளர் குஞ்சுமோன் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பொய்யான தகவல்:-

பத்திரிக்கை என்றது அதிதி சங்கருக்கு தான் திருமணம் என்று நினைத்து இணையத்தில் செய்தி வெளியாகியது. ஆனால் திருமணம் அதிதி சங்கருக்கு கிடையாதாம்.

கடந்த ஜூன் மாதம் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு நடந்த திருமணத்தை வரும் மே 1ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடத்த சங்கர் இரு குடும்பத்தினர் ஒப்புதலில் பேரில் நடத்தவுள்ளாராம். அதற்கான வேலைகள் தான் சங்கர் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

திருமணத்திற்கே பல கோடி அளவில் செட்டமைத்து பிரம்மாண்ட இயக்குனர் என்று நிறுபித்திருந்தார் இயக்குனர் சங்கர். தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சி என்றால் சொல்ல வேண்டுமா என்ன!.

GalleryGallery