அதிதி மீது கடும் கோபத்தில் இருக்கும் ஷங்கர்!..குடும்பத்தில் இப்படி ஒரு குழப்பமா?
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்து வரும் ஷங்கர், தனது மகள் அதிதி டாக்டர் படிப்பை முடித்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விருமன் படத்தில் கமிட்டாகினார்.
இவர் முதல் படத்திலேயே பாடகியாகவும் கதாநாயகியாகவும் அறிமுகமாகி கலக்கினார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஷங்கருக்கு தன்னுடைய மகள் அதிதி சினிமாவிற்கு வந்தது விரும்பவில்லை.மேலும் அதிதி இந்த இரண்டு படங்களில் நடிக்க பல போராட்டங்களை கடந்து தான் ஒத்துக்க வைத்தாராம். தற்போது அதிதி, அப்பாவின் பேச்சை மீறி முழு நேரம் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்பொழுது விஷ்ணுவர்தன் தயாரிப்பில் ஒரு அதிதி நடிக்க போகிறாராம். அதுமட்டுமின்றி அவருக்கு பல பட வாய்ப்புகள் வருவதால் ஷங்கர் கோபத்தில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.