படுதோல்வியடைந்த இந்தியன் 2, கேம் சேஞ்சர்.. வாரிசு நடிகருடன் இணையும் இயக்குநர் ஷங்கர்

Vikram Shankar Shanmugam Tamil Directors Dhruv Vikram
By Kathick Feb 13, 2025 12:30 PM GMT
Report

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் தோல்வியடைந்தது.

மேலும் கேம் சேஞ்சர் படத்தின் தோல்வி காரணமாக தயாரிப்பாளர் தில் ராஜுவிற்கு ரூ. 200 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு தோல்விக்கு பின் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 வெளிவரவுள்ளது. இப்படம் கண்டிப்பாக இவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படுதோல்வியடைந்த இந்தியன் 2, கேம் சேஞ்சர்.. வாரிசு நடிகருடன் இணையும் இயக்குநர் ஷங்கர் | Shankar Going To Direct Dhruv Vikram

இதை தொடர்ந்து வேல்பாரி படத்திற்கான வேளையில் ஷங்கர் ஈடுபட்டு வந்த நிலையில், அதற்கு முன் மற்றொரு படத்தை இயக்கப்போகிறாராம். அப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

விக்ரம் கேட்டுக்கொண்டதால் தான் ஷங்கர் இப்படத்தை இயக்க ஓகே சொல்லியதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.