இளம் இயக்குனரின் கதை! அவர் மரணத்தால் இந்த நிலைக்கு வந்தாரா சங்கர்..

director indian shankar ramcharan karthiksubburaj
By Edward Jul 16, 2021 08:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக ரஜினிகாந்தின் சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற படங்களை இயக்கி கோடிகளில் சம்பளம் வாங்குபவராக இருப்பவர் இயக்குநர் சங்கர். சமீபத்தில் அவர் இயக்க ஆரம்பித்த இந்தியன், தெலுங்கு ராம் சரணின் ஒரு படம் என்று பிரச்சனையில் சிக்கி வருகிறார். இது ஒரு புறம் இருக்க அந்நியன் படத்தினை இந்தியில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு சரியான கதை அமையாமல் தடுமாறி வந்த இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்கப்போகும் ராம்சரண் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை வாங்கி படமாக்கப் போவதாக செய்திகள் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கின்றன. ஷங்கரின் படங்களில் பெரும்பாலான பங்கு அவரது எழுத்தாளர் சுஜாதாவுக்கு உண்டு. எழுத்தாளர் சுஜாதா வசனங்களிலும் சரி, திரைக்கதை அமைப்பிலும் சரி, அதேபோல் கதை அமைப்பிலும் சரி சங்கருக்கு உறுதுணையாக இருந்தவர்.

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே பட்டி தொட்டிகளில் பிரம்மாண்ட வெற்றியை குவித்த படங்கள். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். மேலும் ஷங்கரின் புதிய படம் முழுக்க முழுக்க அரசியல் அதிரடியில் உருவாக உள்ளதாம். முன்னதாக கமலஹாசனை வைத்து அரசியல் கலந்த சமூக அதிரடிகளை படமாக்கி வந்த சங்கர் அந்த படத்தை தடை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர் மற்றும் ராம் சரண் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் அதை எந்த விதத்திலும் ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறாராம் ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் அந்நியன் படத்தினை அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.