விஜய்யுடன் நடிச்சதால் அசினுக்கும் திரிஷாவுக்கும் பிரச்சனையா!! அவரே கொடுத்த விளக்கம்...
திரிஷா 43
சினிமாத்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலான டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை திரிஷா. வரும் மே 4 ஆம் தேதியோடு தன்னுடைய 43வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவர் நடிப்பில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கருப்பு படம் ரிலீஸாகவுள்ள நிலையில், தன்னுடைய அறிமுக வீடியோ குறித்து சில கருத்துக்கள் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தென்னிந்திய சினிமாவில் திரிஷா, நயன் தாரா, அசின் ஆகிய மூவரும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் தான் சினிமாவில் அறிமுகமாகினர். சில மாதங்களோ அல்லது வருடங்களிலோ தான் வித்தியாசம் இருக்கும்.

மூன்று பேரையுமே தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகைகளாக திகழ்ந்தனர். அசின் முதலில் திருமணம் செய்து கொள்ள, சில ஆண்டுகளுக்கு முன் நயனும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இன்னும் திரிஷா மட்டும் சிங்கிளாகவே இருக்கிறார். அப்போது பல நடிகைகளுக்கு இடையே போட்டிகள் ஏற்படும்.
அசினு - திரிஷா பிரச்சனை
நயனுடனான போட்டி பலருக்கும் தெரிந்த நிலையில், அசினுடன் கடும் மோதல் ஏற்பட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க, அடுத்த படமான சிவகாசியில் அசின் நடித்தார். திரிஷா அளவிற்கு விஜய்யுடன் அதிக படங்களில் அசினும் நடித்தார். அசின் பாலிவுட் பக்கம் சென்றப்பின் தான் திரிஷாவுடன் மோதல் முடிவுக்கு வந்ததாக அப்போதை பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது. திரிஷா சில வருடங்களுக்கு முன் அசின் பற்றி பேசிய வீடியோ தற்போது பரவி வருகிறது.

அதில், அசினுடன் எனக்கு மோதல் என்பது முற்றிலுமான வதந்தி, அசின் மட்டுமில்லை எந்த நடிகைகளுடனும் எனக்கு மோதல் வந்ததில்லை. வர்ஷம் படத்திற்காக ஃபிலிம்பேர் விருது வென்றேன். அந்தவிழாவில் தான் முதன்முறையாக அசினை பார்த்தேன். அப்போது என்னிடம் அவர் வாழ்த்து தெரிவித்தார். எப்போதும் எனக்கு அவருடன் எந்த சண்டையும் வந்ததில்லை, ஆனால் மீடியாக்கள் அதனை உருவாக்கிவிட்டன.

நாங்கள் இருவரும் ஒரேமாதிரியான படங்கள் நடித்திருக்கிறோம். விஜய்யுடன் நான் ஒரு படத்தில் நடித்தால் அடுத்த படத்தில் அசின் நடிப்பார். விஜய் மட்டுமில்லை, சூர்யா, விக்ரமுடனும் அப்படித்தான், எதையுமே நான் பர்சனாக எடுத்துக்கொண்டதில்லை, அவருடன் எனக்கு பர்சனலாக காண்டாக்ட் இல்லை, அவர் ரொம்பவே ப்ரொஃபஷ்னலாக இருப்பார் என்று திரிஷா தெரிவித்துள்ளார்.