இயக்குநர் சங்கரை பழிவாங்குகிறது லைக்கா! இதற்கும் வைகைப்புயல் வடிவேலுதான் காரணமா?
தமிழ் சினிமாவில் தி லிஜெண்ட்ரி நடிகராக திகழ்ந்து அனைத்துவித ரசிகர்களையும் ஈர்த்தவர் காமெடி நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்ற பெயரோடு முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்த வடிவேலு, அரசியல் பிரச்சாரத்தாலும் சில சினிமா பிரச்சனையாலும் சினிமாவில் மார்க்கெட்டை இழந்து விலகி இருந்தார். அதற்கு ஒரு காரணம் சங்கர் என்று கூறப்பட்டது.
அதாவது, சங்கர் தயாரித்து படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட படம் இம்சை அரசன் படத்தின் 2ஆம் பாகமான 24ஆம் புலிகேசி. 23 ஆம் புலிக்கேசியின் வெற்றிக்கு பிறகு வடிவேலுவை வைத்து ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெற்றிக்கரமாக ஆரம்பமானது. ஆரம்பித்த சில காலத்தில் பல்வேறு சிக்கல்கள் வடிவேலுவால் எழுந்தது. காஷ்டியூம் சரியில்லை, மேக்கப் சரியில்லை என்று வடிவேலு குறைக்கூறிக்கொண்டே இருந்துள்ளார்.
கடைசியொல் சூட்டிங் ஸ்பாட்டில் தனது சம்பளத்தை அதிகமாக்கி கேட்டு பாதியில் நிறுத்த காரணமாக அமைந்ததாம். இதனால் சங்கருக்கு 7 கோடி வரை நஷ்டமாகியதால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளார். அதன்காரணமாக வடிவேலுவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாம். தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வை லைக்கா நி்றுவனம் தயாரிக்க அது சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இடையில் சங்கர் தெலுங்கு படத்திற்கு கவனம் செலுத்தியதை லைக்கா நிறுவனம் வழக்கு போட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் வழக்கின் சாராம்சமாக இந்தியன் 2 படத்திற்கு பிறகு தான் அடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகளை ஷங்கர் வெளியிட வேண்டும் என கிடுக்குப்பிடி போட்டது லைகா.
இப்போது நடிகர் வடிவேலுவை வைத்து “நாய் சேகர்” என்கிற படத்தை தயாரிக்கிறது லைக்கா.
எதிரியின் எதிரி நண்பன் என்பது போல ஷங்கரின் எதிரியாக வடிவேலுவை வைத்து லைக்கா நிறுவனம் நகர்த்தி வருகிறது. ஆனால் சங்கரும் வடிவேலுவும் சமரசம் பேசி வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகிறார்கள்.