வாய்ப்பு கொடுத்ததுக்கு நீ செய்ற விசுவாசம் இதானா?ஷங்கரை பழித்தீர்த்த தயாரிப்பாளர்..

director shankar kunjimohan Gentleman 2 Gentleman
By Edward Jan 24, 2022 11:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்று தற்போது தெலுங்கு சினிமா நடிகரான ராம் சரணை இயக்கி பிஸியாக இருப்பவர் சங்கர். ஜெண்டில்மேன், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட ஆரம்ப ஹிட் படங்களாலும், சிவாஜி, எந்திரன், 2.O போன்ற படங்களாலும் மிகப்பெரிய வசூல் மன்னராக திகழ்ந்தி வருகிறார்.

ஆரம்பத்தில் ஜெண்டில்மேன் படம் அறிமுக இயக்குனராக கிடைத்தது. அப்படத்தினை தயாரிப்பாளர் குஞ்சு மோகன் தயாரித்து வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றார். பின் வேறொரு படத்தில் நடிகர் அர்ஜுனும் இயக்குனர் சங்கரும் பிஸியாக இருந்த சமயத்தில் குஞ்சு மோகன் ஜெண்டில்மேன் 2 பாகம் பற்றி பேச்சு எடுத்தார்.

ஆனால் இருவரும் பிஸியாக இருந்ததால் வேண்டாம் என்று கூறினர். இதனால் கொபமடைந்த குஞ்சு மோகன் ஜெண்டில்மேன் 2 பாகத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். இப்படத்தின் இசையை பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

பிரம்மாண்ட செலவில் இப்படம் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளதாம். அதற்காக இயக்குனர் நடிகர் நடிகைகளின் தேர்வும் சம்பளமும் பற்றிய ஆலோசனையில் இருந்து வருகிறார் குஞ்சு மோகன்.