ஐஸ்வர்யாவின் திருமண விஷேசத்தை நிறுத்திய சங்கர்! கோடிக்கணக்கில் செட் போட்டீங்களே..
Shankar
By Edward
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் சங்கர். ஜெண்டில் மேன் படத்தில் ஆரம்பித்து ராம்சரண் 15 படம் வரை நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.
கடந்த ஆண்டு அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு தொழிலதிபர் தாமோதரன் மகண் ரோகித் என்பவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணத்தை நடத்தி வைத்தார். பிரம்மாண்டமாக செட்டமைத்து நடைபெற்ற திருமணத்திற்கு ஒருசிலரை மட்டுமே சங்கர் அழைத்திருந்தார்.
தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வரும் மே 1 ஆம் தேதி பிரம்மாண்டமாக வைக்க முடிவு செய்திருந்தார். இதற்காக பிரபலங்களை சந்தித்து அழைப்பிதழையும் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் அந்நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மகளின் திருமண வரவேற்பை தள்ளி வைத்துள்ளார் சங்கர்.