31 வருட சினிமா வாழ்க்கை! வாய்ப்பிற்காக இளையராஜாவை பார்த்து பயந்த இயக்குனர் சங்கர்!
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். ஜெண்டில் மேன் படத்தின் மூலம் ஆரம்பித்த இயக்குனர் அவதாரம் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து பிரம்மாண்ட படத்தினை இயக்கி வருகிறார்.
எடுத்த அனைத்து படங்களும் மக்கள் மனதை ஈர்த்து வந்தது. இவர் படம் என்றால் அதில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தான் இருப்பார். அப்படியொரு காம்போவாக மிகப்பெரிய கூட்டணியாக அமைந்து வருகிறது. ஆனால் சங்கர் இதுவரையில் இசைஞானி இளையராஜாவுடன் இணையாமல் இருந்து வருகிறார்.
அதற்கான வாய்ப்பு அமையாமலே இருந்துள்ளது. இதுகுறித்து சங்கர் இளையராஜாவின் 75வது பிறந்த நாள் விழாவன்று மேடையில் பேசியுள்ளார். ராஜா சாருடன் படம் செய்ய வாய்ப்பு அமையவில்லை. எல்லா காலக்கட்டத்திலும் அவரது பாடலை ரெக்கார்ட் செய்து கேட்டு வருகிறேன்.
அப்படி ஒருமுறை என் முதல் படத்திற்கு அவர் இசையிருக்க எனக்கு ஆசையாக இருந்தது. ஆனால் எனக்கு பயமாக இருந்தது. அவரை பார்க்க அப்பாய்ட்மெண்ட் வாங்கியும், பயத்தாலும் தயக்கத்தாலும் அதிலிருந்து பின் வாங்கி விட்டேன். பின் என்னுடைய விளம்பர படத்திற்கு இசையமைத்து கொடுத்துள்ளார் இளையாராஜா சார் என தெரிவித்துள்ளார்.
ஆனால் இளையராஜாவிடம் தன்னுடைய முதல் படத்திற்குகாக பல மணிநேரம் சங்கர் காக்க வைக்கப்பட்டார் என்று செய்திகள் அப்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.