விஜயகாந்த் மகனுக்கு எப்போது திருமணம்.. வெளிவந்த தகவல் இதோ

Vijayakanth Premalatha Vijayakanth
By Kathick Jun 16, 2025 02:30 AM GMT
Report

விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால்தான் அவரது திருமணம் நடக்கவில்லை என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விஜய பிரபாகரன் திருமணம் குறித்து அவரது தம்பி நடிகர் சண்முக பாண்டியன் பேசியுள்ளார். சண்முகபாண்டியன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் படைத்தலைவன்.

விஜயகாந்த் மகனுக்கு எப்போது திருமணம்.. வெளிவந்த தகவல் இதோ | Shanmuga Pandian About Vijaya Prabhakaran Marriage

இப்படத்தின் பிரஸ் ஷோ முடிந்த நிலையில், அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஹீரோ சண்முகபாண்டியன் படம் குறித்து பல விஷயங்களை பேசினார். அதன்பின் தனது அண்ணன் விஜய பிரபாகரனின் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.

விஜய பிரபாகரன் திருமணம் குறித்து பேசிய சண்முகபாண்டியன் "எனக்கு அண்ணி விரைவில் வருவார். எனது அண்ணனுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அதற்கு நேரம் விரைவில் வரும்" என கூறியுள்ளார்.