பேராண்மை பட நடிகையா இது? குண்டாகி அடையாளம் தெரியாமல் மாறிய தற்போதை நிலை..
சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் ஒரு படத்திலோ அல்லது ஒருசில படங்களில் நடித்து அதன் பின் எங்கு சென்றார் நிலைக்கு பேசப்படுவார்கள். அதுபோல பல தமிழ் நடிகைகள் அதுவும் இளம் நடிகைகள் படவாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டே விலகி விடுவார்கள்.
அந்தவகையில் நீ வருவாய் என படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் நடிகர் ஜெயம் ரவியின் பேரணாமை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா நாக்.
இதற்குமுன் காதல் படத்தில் நடிகை சந்தியாவிற்கு தோழியாக நடித்தும் உள்ளார். இதையடுத்து, சில படங்களில் நடித்திருந்த நடிகை சரணயா நாக்கிற்கு ஹார்மோனில் ஏற்பட்ட சில பிரச்சனையால் உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
சமீபத்தில் சில பேட்டிகளில் எடுத்த வீடியோக்களால் தற்போது மீண்டும் பிரபலமாகியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே பேராண்மை சரண்யாவா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.