நிச்சயமாகி 4 மாதத்தில் நிறுத்தப்பட்டதா சமந்தா பட நடிகரின் திருமணம்!! இதுதான் உண்மை..
தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாகி அதன்பின் தமிழில் காதல்னா சும்மா இல்லடா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகர் சர்வானந்த். எங்கேயும் எப்போதும் படத்தில் முக்கிய ரோலில் நடித்த சர்வானந்த், 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் சமந்தாவுடன் இணைந்து ராம் ரோலில் நடித்திருந்தார்.
இப்படத்தினை அடுத்த ஒருசில படங்களில் நடித்து வந்த சர்வானந்த் சாப்ட்வேர் என் ஜினியரான ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது. முக்கிய பிரபலங்கள் நிச்சயத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தனர்.
இந்நிலையில் நிச்சயம் முடிந்து 4 மாதமாகியும் திருமண தேதியை இன்னும் அறிவிக்காமல் இருந்ததால் திருமணம் நின்று போய்விட்டதா என்ற செய்தி இணையத்தில் கசியத்துவங்கியது.
இதுகுறித்து சர்வானந்த் தரப்பில் திருமணம் நின்று போனதாக வெளியாகும் செய்தி உண்மையில்லை என்றும் அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வானந்த் படப்பிடிப்பில் வெளிநாட்டில் பிஸியாக இருந்து தற்போது தான் திரும்பி வந்துள்ளார் என்றும் திருமண தேதியை இன்னும் உறுதி செய்யவில்லை. விரைவில் உறுதிப்படுத்தி தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.