வீட்டிற்கு வந்து அந்த இடத்தில் கைவைத்து டார்ச்சர் செய்த தொழிலதிபர்!! அதிர்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகை..
பாலிவுட் சினிமாவில் கிளாமர் நடிகையாக திகழ்ந்து நடிகர் ஜீவன் நடிப்பில் வெளியான யூனிவர்சிட்டி என்ற படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தமிழில் பிரபலமானார் நடிகை ஷெர்லின் சோப்ரா. சில ஆண்டுகளுக்கு முன் பிரபல நடிகையின் கணவர் படப்பிடிப்பு என்று கூறி ஆபாசமாக படமெடுத்து இணையத்தில் காசு சம்பாதித்த விவகாரத்தில் புகாரளித்திருந்தார் ஷெர்லின் சோப்ரா.
இதனை தொடர்ந்து தற்போது, ஒரு தொழிலதிபர் மியூசிக்கல் வீடியோவில் முதலீ செய்வது குறித்து பேசுவதாக கூறி தன்னிடம் அத்து மீறியதாக போலிசில் புகாரளித்துள்ளார். ஷெர்லின் சோப்ரா கூறியது, கடந்த 12 ஆம் தேதி அன்று மும்பையை சேர்ந்த தொழிலதிபர் என்னை பார்க்க மும்பையில் இருந்து வந்திருந்தார்.
அவரை சந்தித்த போது மியூசிக்கல் வீடியோ மூலம் முதலீடு செய்வதற்காக, குறித்த தொகையை அட்வான்ஸ்-ஆக கொடுத்தார். ஆனால் அது பத்தாது என்று கூறி, 15 அல்லது 20 லட்சம் ஆகும் என்று கூறினேன். அவரும் அதை கொடுக்க ஒப்புக் கொண்டார். அதன்பின் அங்கிருந்து கிளம்பிய போது தன்னை ட்ராப் செய்யுமாறு கேட்டார்.
என்னை முதலில் வீட்டில் விட்டுவிட்டு பின் அவரை விட்டுவிடுமாறு என் டிரைவரிடம் கூறினேன். அதன்பின் என் வீட்டை காட்ட வேண்டும் என்று கேட்டார். நானும் வீட்டிற்கு அழைத்து சென்று சாப்பாடும் அளித்தேன். சோபாவில் அமர்ந்திருந்த போது என் மார்பை தொட்டு என்மேல் கை வைக்க துவங்கினார்.
எனக்கு விருப்பமில்லை என்று எச்சரித்தும், உன்னை பார்த்தால் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறி அதை தொடர்ந்தும் செய்தார். இதெல்லாம் எனக்கு பிடிக்காது என்று கூறிவிட்டு கிளம்ப சொன்னேன்.
ஆனால் மொபைலுக்கு சார்ஜ் போட வேண்டும் என்று கூறி பெட்ரூம் சென்ற போது என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த ஆரம்பித்தார் அந்த தொழிலதிபர். இதனால் கோபத்தில் சினில் மீது போலிசில் புகாரளித்ததாக ஷெர்லின் சோப்ரா கூறியுள்ளார்.