தொடப்ப கட்டையை எடுத்து அடிச்சிடுவேன்! வயசுக்கு மரியாதை கொடுக்காமல் ஷிவாங்கி செய்த செயல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய ஹிட் கொடுத்து வரும் நிகழ்ச்சியாக இருப்பது பிரபல தொலைக்காட்சி ஒளிப்பரப்பு குக் வித் கோமாள். கடந்த ஆண்டு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி இரண்டாம் சீசனின் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது வரை தீபா, மதுரை முத்து, தர்ஷா, ரித்திகா, கடந்த வாரம் வெளியே பவித்ரா உட்பட எலிமினேட் ஆகியுள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் ஷகிலா, அஷ்வின், கனி, பவித்ரா போட்டியிட்ட பகுதியில் மதுரை முத்து அழைக்கப்பட்டார். சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலா சரத்தை பார்த்து பாடல் எதாவது பாடுங்க என்று கூறியுள்ளார். அதற்கு ஷிவாங்கி அஷ்வின் பாடுவார் என்று கூறினார். அப்போது மதுரை முத்து சிவாங்கியை பார்த்து நீ 7 கட்டைல பாடு சரத் வெளக்குமாத்து கட்டைல பாடுவார் என்று சொல்லியுள்ளார்.
உடனே சிவாங்கி யாரும் எதிர்பாராத நிலையில் தொடப்ப கட்டையை அடுத்து அடிச்சிடுவேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட மதுரை முத்துவின் முகம் மாறியது. உடனே டிஜே எள்ளு வய பூக்களையே என்ற பாடலை போட்டுள்ளார்.
ஷிவாங்கியின் இந்த செயலால் சுற்றியிருந்தவர்கள் சிரிப்பை காட்டி கதையை மாற்றினர். ஆனால் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நெட்டிசன்கள் வயசுக்கு மரியாதை கொடுக்காமல் இப்படியா பேசுவது என்று திட்டி வருகிறார்கள்.