அரபிக் குத்துக்கு, செம குத்து குத்திய ஷிவானி.. தீயாய் பரவும் வீடியோ
song
dance
pooja hegde
shivani narayanan
arabic kuthu
By Kathick
சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ஷிவானி, தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்து கனவு கன்னியாக மாறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நல்ல வரவேற்பை பெற்ற, ஷிவானிக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி, கமலுடன் - விக்ரம், வடிவேலுடன் - நாய் சேகர் Returns, விஜய் சேதுபதி VJS 46 உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன், தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு , சூப்பராக நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..