அரைகுறை ஆடையில் நடனமாடி அத்துமீறும் ஷிவானி! இதற்கு நெட்டிசன்கள் கொடுத்த கமெண்ட்
ஷிவானி நாராயணன்
வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஷிவானி நாராயணன். இவர் சரவணன் மீனாட்சி 3ம் சீசன் சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார்.
கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியால்களில் நடித்த வந்த ஷிவானி, உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் 4 -ல் பங்கேற்று இறுதி சுற்றுக்கு முந்தைய வாரம் வரை முன்னேறி மக்களிடத்தில் பிரபலமடைந்தார்.
அதற்கு பிறகு இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய பிரமாண்ட திரைப்படமான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார் . மேலும் சமீபத்தில் வைகை புயல் வடிவேலு நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

கவர்ச்சி ஆட்டம்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் ஷிவானி, சில சமயங்களில் அவர் பதிவிடும் கவர்ச்சியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி விடும்.
இந்நிலையில் இவர் லேட்டஸ்டாக அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக ஆடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
