பணத்திற்காக பிக்பாஸ் ஷிவானி செய்த காரியம்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
நடிகை ஷிவானி நாராயணன் சீரியல்களில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர். இத்தனைக்கும் மிக இளம் வயதிலேயே அவர் சின்னத்திரையில் பாப்புலர் ஹீரோயினாக இருந்தார்.
இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் அவர் ரசிகர்களை ஈர்ப்பதற்காக அதிகம் கிளாமராக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வந்தார். அந்த புகழ் மூலமாக பிக் பாஸ் வாய்ப்பும் அவருக்கு தேடி வந்தது.
அந்த ஷோவுக்கு பிறகு ஷிவானிக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரும் ஏற்றுக்கொண்டு நடித்தார், ஆனால் படத்தில் அவர் சில நிமிடங்கள் கூட வரமாட்டார், அப்படி ஒரு ரோல் அது.
தற்போது மேலும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஷிவானி இன்ஸ்டாகிராமில் சம்பாதிப்பதற்காக ஒரு gambling appக்கு விளம்பரம் செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர். பணத்திற்காக இப்படி இறங்கிட்டாரே எனவும் ட்ரோல் செய்கின்றனர்.