பெத்தவங்கள விஜய் கண்டுக்கலையா!! மறைமுகமாக பதிலடி கொடுத்த தளபதி.. வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் டாப் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
சமீபத்தில் இப்படத்தின் நான் வரவா பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் விஜய் அரசியல் நுழைவுக்காக, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல விசயங்களை செய்து வருகிறார்.
தற்போது, கடந்த மூன்று நாட்களாக பல மாவட்டங்களில் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்களை சந்தித்து பல விசயங்களை கூறியிருக்கிறார். இந்நிலையில் விஜய் தன் பெற்றோர்களை கைவிட்டார் என்றும் அவர்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகவும் கூறி செய்திகள் வெளியானது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விஜய் தன் அம்மா ஷோபா வாங்கி தந்த சட்டையை அந்நிகழ்வுக்கு போட்டு வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் விஜய் அம்மா ஷோபா, தனியார் ஊடகத்திற்கு பேட்டிக் கொடுத்துக்கொண்டே விஜய்க்கு ஒரு சட்டை வாங்கியிருப்பார்.
நான் என்ன எடுத்தாலும் போட்டுப்பார் விஜய், என்று கூறி 42 சைஸ் சட்டையை எடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு விஜய் ரசிகர்கள், என்னென்னலாம் சொன்னாங்க இப்ப பாருங்க என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
No caption needed ❤️❤️❤️ pic.twitter.com/qCJbZhm8Z3
— Vijay Fans Trends (@VijayFansTrends) July 12, 2023
