சுச்சி லீக்ஸால் கதிகலங்க வைத்த சுசித்ரா.. அந்தரங்க விஷயம் லீக்காக இதுதான் காரணம்...

Gossip Today Suchitra Tamil Actress Tamil Singers
By Edward Sep 05, 2024 04:30 PM GMT
Edward

Edward

Report

நடிகர் விஜய், தனுஷ் தொடங்கி திரிஷா, கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா, சில ஆண்டுகளுக்கு முன் பல நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்களை சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

தாம்புல தட்டில் போதைப்பொருள்

சில நாட்களுக்கு முன் கூட கமல் ஹாசனின் பர்த்டே பார்ட்டியில் தாம்புல தட்டில் போதைப்பொருள் பரிமாறப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியீட்டுக்கு பின் பாலியல் சீண்டல்களும் வெளிச்சத்துக்கு வருகிறது.

மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் சிலர் சேர்ந்துதான் ஹேமா கமிட்டி விஷயத்தை ஊதிப்பெரிதாக்குவதாகவும் பகத் பாசில் உள்ளிட்ட வளர்ந்து வரும் நடிகர்களின் கேரியரை அழிக்கவே தான் இவ்வாறு செய்து வருகிறார்கள் என்றும் சுச்சி குற்றம் சாட்டினார்.

தன் வாழ்க்கையே நாசமாக போதைப்பார்ட்டி வைத்ததால்தான் இப்படியானது என்று சுசித்ரா தன்மீது குற்றச்சாட்டி பேசியதை நடிகை ரீமா கல்லீகல் மறுத்து சுசித்ரா மீது புகாரளித்து கைது செய்ய வலியிறுத்தியிருக்கிறார்.

சுச்சி லீக்ஸால் கதிகலங்க வைத்த சுசித்ரா.. அந்தரங்க விஷயம் லீக்காக இதுதான் காரணம்... | Shocking Allegations By Suchi Leaks Suchitra

சுச்சி லீக்ஸ்

இப்படி சுச்சி லீக்ஸ் வெளியில் வரக்காரணம் என்ன என்ற விவரத்தை சுசித்ரா சமீபத்தில் கூறியிருந்தார். அதில், கார்த்திக் குமார் கலந்துகொள்ளும் பார்ட்டி வித்தியாசமானது. பிராங்க் செய்து ஒருவரின் எமோஷ்னலோடு விளையாடுவார்கள்.

அதில் திரிஷா என்ன விதமான டேர் கொடுத்தாலும் செய்துவிடுவார். அப்படி ஒருமுறை போதையில் இருக்கும்போது அவர்கள் விளையாட்டாக செய்த விஷயம்தான் சுச்சி லீக்ஸ். எனக்கே தெரியாமல் என் ட்விட்டர் கணக்கில் அந்தரங்க புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.