நடிகை ரைசாவுக்கு என்னதான் ஆச்சி!! கண்ணீர் விட்டு அழுவதை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்...
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு பிஏவாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த ரைசா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் கதாநாயகி வாய்ப்பினை பெற்றார். பியார் பிரேம காதல் படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார். மாடலிங் என்பதால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
சமீபத்தில் நீச்சல் குள புகைப்படம், டூபீஸ் ஆடை என்று போட்டோஷூட் நடத்தி அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது அவரது சமுகவலைத்தளத்தில் கண்ணீர் விட்டு பல நாட்கள் அழுதபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரைசா.
யாரும் தனியாக இல்லை. நாம் அனைவரும் படிப்படியாக அதை கண்டுபிடித்து வருகிறோம் என்று ஒரு பதினையும் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களுக்கு என்னதான் ஆச்சி என்றும் ஆறுதலான கருத்துக்களை கூறியும் வருகிறார்கள். பிரபலங்கள் கூட அவரின் இந்த பதிவிற்கு ஷாக்காகி ரீப்ளே செய்து வருகிறார்கள்.