வேறு பெண்ணுடன் கணவர்... பிரபல நடிகரின் மனைவி பகிர்ந்த சம்பவம்

Actors
By Edward Mar 13, 2026 09:45 AM GMT
Report

கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் கேபி கணேஷ் குமார், நடிகர், அரசியல்வாதி, ஐந்து முறை எம் எல் ஏ, சிட்டிங் அமைச்சர் என்று பன்முகத்திறனை கொண்டு விளங்கி வருகிறார்.

1985ல் இரகள் என்ற படத்தின் மூலம் நடிகரான கணேஷ், 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். த்ரிஷ்யம், நேர் போன்ற படங்களில் சமீபத்தில் நடித்திருந்த கணேஷின் இன்னொரு முகம் தான் கேரளாவின் அரசியல்வாதி.

வேறு பெண்ணுடன் கணவர்... பிரபல நடிகரின் மனைவி பகிர்ந்த சம்பவம் | Shocking Incident Shared By Wife Of Famous Actor

வாரிசு அரசியலாக 2001ல் ஆரம்பித்து பத்தனாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அன்று முதல் இன்று வரை எம் எல் ஏவாக அந்த தொகுதியில் இருந்து வருகிறார். 5 முறை பத்தனாபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5முறையும் வென்றார்.

2001ல் கேரள அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சரானப்பின் 2011ல் உம்மன் சாண்டி அமைச்சரவையில் வனத்துறை, விளையாட்டு மற்றும் சினிமாத்துறை அமைச்சரானார். இடதுசாரி கூட்டணியில் இணைந்து போக்குவரத்து அமைச்சராக தற்போது பணியாற்றி வருகிறார்.

வேறு பெண்ணுடன் கணவர்... பிரபல நடிகரின் மனைவி பகிர்ந்த சம்பவம் | Shocking Incident Shared By Wife Of Famous Actor

இப்படி 3 முறை அமைச்சராக பொறுப்பேற்றாலும் அதில் இருமுறை பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே பதவியை ராஜி னாமா செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டார். தற்போது அப்படியான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் அவர் மனைவி கொடுத்த புகார்தான். கணேஷ் குமாரின் மனைவி பிந்து மேனன், தன் கணவர் வேறொரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தின் பெட்ரூமுக்கு சென்றபோது தன்னிடைய கணவர் ஒரு தவறான நிலையில் கண்டதாகக்கூறிய பிந்து மேனன், தான் கண்ட காட்சியால் அதிர்ச்சியடைந்து அதை புகைப்படம் எடுக்கத்தொடங்கினேன். பெட்ரூமில் நான் கண்டதை விவரிக்க முடியாது, அது அவ்வளவு அவமானகரமானது என்றும் தெரிவித்துள்ளார்.