தீராத மனநோயில் நடிகை கனகா.. தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?
Kanaka
By Dhiviyarajan
90 களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தான் கனகா. இவர் ராமராஜன் நடிப்பில் 1989 -ம் ஆண்டு வெளியான "கரகாட்டக்காரன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.
இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். தென்னிந்திய நடிகையாக வலம் வந்த இவர் சிறிது காலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்நிலையில் கனகா பெண் உதவியாளருடன் தனியாக வசித்து வருகிறாராம். இவர் யாரிடமும் சந்தித்து பேசுவதில்லையாம். தனி அறையில் இருக்கிறாராம்.
சில காரணங்களால் மனதளவில் கனகா பாதிக்கப்பட்டுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.