கங்குவா பட நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு!! அதிர்ச்சியில் மும்பை..
திஷா பதானி
பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.
தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது. அதையெல்லாம் காதில் வாங்காத திஷா பதானி, தற்போது Welcome To The Jungle என்ற படத்தில் நடித்து வருகிறார்.
துப்பாக்கி சூடு
இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் இருக்கும் நடிகை திஷா பதானின் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் வீட்டின் முன் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இருச்சக்கர வாகத்தில் வந்தா 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இச்சம்பத்திற்கு கேங்ஸ்டர் கும்பலை சேர்ந்த கோல்வி பிரார், ரோஹித் கோதாரா என்பவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். தங்களுடைய துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருத்தாசார்யா மகாராஜ் ஆகியோரை திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி இழிவுப்படுத்தியதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இன்னொரு முறை யாராவது எங்கள் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். பேசியவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். சனாதன தர்மம் குறித்து குஷ்பு பதானி அவதூறாக பேசியதாக கூறி 2 பேர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.