அந்த ராசி இல்லா நடிகையுடன் நடிக்கவே வேண்டாம்? சொல்லியும் கேட்காததால் சூர்யாவை வெளுத்து வாங்கிய ஜோதிகா..
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. தற்போது வணங்கான், வாடிவாசல், சூர்யா42 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் சூர்யா, எந்த படத்தில் கமிட்டாகினாலும் ஜோதிகாவிடம் ஆலோசனை கேட்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்.

ஜோதிகா
அப்படி சூரரை போற்று படமும் தேசிய விருது பெற்றதற்கு ஜோதிகாவும் ஒரு காரணம். கதையை கேட்டு ஜோதிகா தான் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று சூர்யாவிடம் கூறியது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது சூரரை போற்று படம்.
சமீபத்தில் கூட பல விருதிகளோடு சேர்த்து தேசிய விருதும் கிடைத்திருந்தது. இந்நிலையில் ஒருசமயம் ஜோதிகா, சூர்யாவிடம் இந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது என்று கூறியிருக்கிறாராம்.

சமந்தா
ஏனென்றால் அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து ராசியில்லாத நடிகையாக மாறி வருகிறார் என்ற காரணம் தானாம். அதுவேறு யாருமில்லை நடிகை சமந்தா தான். ஆனால் சூர்யாவோ ஜோதிகாவின் பேச்சை கேட்காமல் 24, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் அவருடன் ஜோடிப்போட்டு நடித்துள்ளார்.
ஆனால் படம் ஜோதிகா சொன்னமாதிரி தோல்வியை சந்தித்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்தது. சூர்யாவுக்கு தான் சமந்தா ராசி இல்லாமல் போனாரே தவிர அப்போது விஜய்க்கு ராசியான நடிகையாக திகழ்ந்து வந்தார் நடிகை சமந்தா. கத்தி, தெறி போன்ற படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.