அந்த நிகழ்ச்சியா வேண்டவே வேண்டாம்! நடிகர் விஜய்பட நடிகை ஒதுக்க இதுதான் காரணமா?
சினிமாவில் பிரபலங்களை உருவாக்கும் பல பணிகளில் ஈடுபட்டு வருவது பிரபல தொலைக்காட்சி நிறுவனம். ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்து நல்ல வரவேற்பை பெற்றது. அந்நிகழ்ச்சியையே தூக்கி சாப்பிட்டு பெரிய ஹிட் கொடுத்து வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
கடந்த முதல் சீசனைவிட பெரியளவில் பிரபலமானது தற்போதைய குக் வித் கோமாளி நிகழ்ச்சி. தற்போது இரண்டாம் சீசன் முடியும் தருணத்தில் இருக்கிறது. இதையடுத்து அடுத்த 3வது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. அதற்காக பல பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதில் எஸ் எம் எஸ், நகரம் மறுபக்கம், விஜய்யின் நண்பன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அனுயா பாக்வத்.
சமீபத்தில் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு சில வாரங்களிலேயே வெளியேறினார்.
தற்போது குக் வித் கோமாளியில் பங்கேற்க கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு அனுயா, என்னால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது. அதற்கு காரணம், எனக்கு தமிழ் பேசவும் காமெடியாக பேசவும் முடியாது. வாய்ப்பு கிடைத்தால் நான் செல்ல மாட்டேன் கூறியுள்ளாராம் அனுயா.