ஒரு பாட்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம்!! பல கோடியில் அபார்ட்மெண்ட் வாங்கிய பாடகி ஸ்ரேயா கோஷல்..

Shreya Ghoshal Mumbai Tamil Singers Net worth
By Edward Apr 07, 2026 03:15 PM GMT
Report

இந்திய சினிமாவில் முன்னணி பாடகியாகவும் அதிக சம்பளம் வாங்கும் பாடகியாகவும் திகழ்ந்து வருபவர் பாடகி ஸ்ரேயா கோஷல்.

ஒரு பாட்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம்!! பல கோடியில் அபார்ட்மெண்ட் வாங்கிய பாடகி ஸ்ரேயா கோஷல்.. | Shreya Ghoshal Buys Apartment Worth Rs 29 7 Crore

ஸ்ரேயா கோஷல்

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் 3000-க்கும் மேற்பட்ட பாடலை பாடி வரும் ஸ்ரேயா, சமீபத்தில் மும்பையில் பல கோடி மதிப்பிலான அபார்ட்மெண்ட் ஒன்றினை வாங்கியிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

தெற்கு மும்பையின் வொர்லி பகுதியில், பாடகி ஸ்ரேயா கோஷல் சுமார் ரூ.29.7 கோடி மதிப்பிலான பிரீமியம் அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியிருக்கிறார். 2,750 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த அபார்ட்மெண்ட்டில் 3 கார் பார்க்கிங் வசதியுள்ளது.

ஒரு பாட்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம்!! பல கோடியில் அபார்ட்மெண்ட் வாங்கிய பாடகி ஸ்ரேயா கோஷல்.. | Shreya Ghoshal Buys Apartment Worth Rs 29 7 Crore

இதற்காக ஸ்ரேயா கோஷல், ரூ.1.78 கோடி முத்திரைக் கட்டணமாகவும், பதிவு கட்டணமாக ரூ.30 ஆயிரமும் செலுத்தி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பாடலுக்கு சுமார் ரூ.25 லட்சம் சம்பளமாக பெரும் ஸ்ரேயா கோஷலின் நிகர சொத்து மதிப்பு ரூ.185 கோடி முதல் 240 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கணிக்கபப்ட்டுள்ளது.