வீடியோ எடுக்கும்போது வழுக்கி விழுந்த ஸ்ரேயா: வைரல் வீடியோ

shriyasaran
By Yathrika Nov 26, 2021 10:10 AM GMT
Yathrika

Yathrika

Report

நடிகை ஸ்ரேயா சரண் Andrei Koscheev என்ற ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தாலும் தான் கர்ப்பமாக இருந்த தகவலை அவர் மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தார்.

அவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது என்கிற தகவலையே சமீபத்தில் தான் வெளியிட்டு இருந்தார். அதை கேட்டு ரசிகர்கள் பெரிய அளவில் ஆச்சர்யம் அடைந்தனர்.

இதை இத்தனை நாள் ரகசியமாகவே வைத்திருந்திருக்கிறாரே என நெட்டிசன்கள் கூறினர். ஸ்ரேயா தனது குழந்தை ராதா உடன் இருக்கும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் தற்போது ஸ்ரேயா இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருக்கும்போது தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்.

அதுவும் கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஸ்ரேயாவின் கணவர் தான் இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவரை கிண்டல் செய்து இருக்கிறார். "ஸ்ரேயா சினிமா துறைக்கு வந்து இருபது ஆண்டுகள் ஆகிறது.

அதை கவுரவப்படுத்தும் விதத்தில் நான் இதை வெளியிடுகிறேன். அவரது கெரியரில் இதுதான் பெஸ்ட் ஷாட்" என பதிவிட்டு கிண்டல் செய்து இருக்கிறார்.