நடிகர் விஷாலின் அண்ணியார் ஸ்ரேயா ரெட்டியா இது? இப்படியொரு வீடியோவை எதிர்ப்பார்க்கவே இல்ல மேடம்!!
தமிழ் சினிமாவில் சாமுராய் படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. தொகுப்பாளராக ஆரம்பித்து பின் திமிரு, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சீவரம், சில சமயங்களில் போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.
விஷாலின் ஆரம்பக்கட்ட சினிமா படங்களை அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்து வந்தார். திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டி வில்லியாக நடித்திருந்தார். அப்போது விஷால் அண்ணன் மீது காதல் ஏற்பட 2 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தையை பெற்று குடும்பத்தினை பார்த்து வந்த ஸ்ரேயா ரெட்டி 10 வருடங்கள் கழித்து சில சமயங்களில், அண்டாவ காணோம் போன்ற படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.
தற்போது படவாய்ப்பிற்காக உடற்பயிற்சி, போட்டோஷூட் என பிஸியாக இருந்து வரும் ஸ்ரேயா ரெட்டி சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். கில்லி படத்தின் வில்லன் பிரகாஷ்ராஜுடன் திமிரு படத்தின் தான் நடித்த காட்சியை வைத்து ஒரு மீம் வீடியோவை பகிர்ந்துள்ளார்.