குழந்தை பிறந்ததை மறைத்த ரஜினிபட நடிகை ஸ்ரேயா! முதன்முதலில் பேபியுடன் கணவரோடு எடுத்த வீடியோ..

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். ரஜினிக்கு மகள் வயதாக இருக்கும் ஸ்ரேயா நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து பெரியளவில் படங்கள் கிடைத்து நடிக்க ஆரம்பித்தார்ன் ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் பார்சிலோனாவில் செட்டிலாகிவிட்டார். இந்த கொரோனா நோய் பரவலின் ஊரடங்கு காலத்தில் நடிகை ஸ்ரேயாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, நடிகை ஸ்ரேயா தனது திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து இடைவேளை எடுத்துக் கொண்டார்.

அதனால் இவரைப் பற்றிய பேச்சு எங்கும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவுடன், கடவுளுக்கு நன்றி செல்வதாகவும், தனக்கு பெண் தேவதை கிடைத்திருப்பதாகவும், புதுவிதமான அனுபவமும் ஆச்சரியமும் நிகழ்ந்து கொண்டு வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்