ஆள் அடையாளமே தெரியலையே!! கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா சரண்!!
தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் கதாநாயகனுக்கு தோழியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரேயா சரண். அதன்பின் திருவிளையாடல் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
பின் சிவாஜி, அழகிய தமிழ் மகன், குட்டி, கந்தசாமி, மழை உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தும், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாகினார்.
கடந்த 2018ல் வெளிநாட்டு டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்த ஸ்ரேயா சரண் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது 40 வயதாகிய ஸ்ரேயா சரண் மீண்டும் கிளாமர் பக்கம் சென்று பல படங்களில் கிளாமர் ரோலிலும் குடும்ப பாங்கான ரோலிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 2021ல் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தோடு தற்போது இருக்கும் கிளாமர் லுக்கை வைத்து ஒரு புகைப்பட பதிவினை பகிர்ந்துள்ளார்.
ஆள் அப்படியே மாறிட்டீங்களே என்று ரசிகர்கள் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.