சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் ஐசுவா இது? இப்படி குண்டாகி என்ன தொழில் செய்கிறார் தெரியுமா!
தமிழ் சினிமாவில் காதால் ஜோடிகளாக இருந்து பின் ரியல் ஜோடிகளாக மாறிய நட்சத்திரங்கள் பலர் இருக்கிறார்கள். அதில் மிகவும் க்யூட்டான ஜோடி என்றால் அது சூர்யா-ஜோதிகா தான்.
இருவரும் இணைந்து பல படங்களில் இணைந்து நடித்து பல ஹிட் கொடுத்துள்ளனர். அதில் முக்கிய படமாக இருப்பது சில்லுனு ஒரு காதல். அப்படத்தில் அவர்களின் மகளாக நடித்திருப்பார் குட்டி ஐஸு.
இப்படத்தின் மூலம் மிகவும் நல்ல வரவேற்பு பெற்று வந்த ஐஸு என்கிற ஸ்ரேயா சர்மா தெலுங்கு சினிமாவில் இளம்நடிகையாகவும் களம் கண்டார். அதன்பின் வாய்ப்பினை ஒதுக்கிவிட்டு படப்பில் கவனம் செலுத்தினார்.
சட்டப்படிப்பை முடித்து விட்டு தற்போது வழக்கறிஞராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. தற்போது 25 வயதாக ஸ்ரேயா சர்மா சற்று குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இன்றோடு அவர் தன்னுடைய 25வயதினை ஆரம்பித்துள்ளதை தனியாக கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.