காதலருடன் ஓடிப்போய், தற்கொலை முயற்சி செய்த ஸ்ருத்திகாவின் அம்மா!! காரணம் இதுதான்..
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்தின் மூலம் கதாநாயகியாக சிறுவயதில் அறிமுகமாகினார் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன். இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்த ஸ்ருத்திகா தேங்காய் ஸ்ரீனிவானின் பேத்தி என்ற செய்தி வெளியானது. பின் நடிப்பில் இருந்து விலகிய ஸ்ருத்திகா, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார்.
ஸ்ருத்திகா, கிச்சன் யூடியூப் சேனலை ஆரம்பித்து சில சமையல் கலாட்டா வீடியோவை பகிர்ந்து வருகிறார். அப்படி சமீபத்தில் எடுத்த வீடியோவில், ஸ்ருத்திகாவின் அம்மா கல்பனா, உன் காதல் எல்லாம் என்ன பெரிய காதல்? நானும் உங்க அப்பாவும் செய்த காதல் திருமணம் எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியது தெரியுமா? என்று கூறியிருக்கிறார்.
நாங்கள் கல்யாணம் பண்ணும் போது உன் அப்பாவுக்கு 19 வயது. நான் பஞ்சாபி, எனக்கு 23 வயது. கிட்டத்தட்ட 4 வயது பெரிய பொண்ணு என்பதால் இரு வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஒருநாள் இருவரும் ஓடிப் போய்விட்டோம்.
எங்களை தேடியும், ஒரு பொண்ணு தேங்காய் ஸ்ரீனிவாசன் பையன் சங்கரை கடத்திட்டு போய்விட்டாள் என்று நியூஸ் பேப்பரில் வந்தது. இதனை அறிந்து நான் கடலில் விழுந்து தற்கொலை செய்ய சென்றுவிட்டேன். உன் அப்பா தான் காப்பாற்றி கூட்டிட்டு வந்தார் என்று தெரிவித்தார்.
பின் அங்கே சென்று பார்த்தால் போலிஸ் புகார் அளிக்கப்பட்டு என்னிடம், நீ அந்த பையனை கடத்திட்டு போனியா? என்று கேட்டார்கள். அதை சங்கரிடம் கேளுங்கள் என்று கூறினேன். சங்கரும் நாங்க லவ் பண்ணி தான் போனோம் என்று கூறியும் மறுபடியும் என்னிடம் நீ கடத்திட்டு போனுயான்னு கேட்டாங்க என்று வேடிக்கையாக ஸ்ருத்திகாவின் அம்மா கல்பனா தெரிவித்துள்ளார்.