கமல் மகளுக்கு திருமணமாகிவிட்டதா? உண்மையை கூறி ஷாக் கொடுத்த ஸ்ருதிஹாசன் காதலர்..

kamalhaasan shrutihaasan sarika tamilactress shantanu
By Edward Mar 23, 2022 10:09 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருபவர் ஸ்ருதிஹாசன். 3, 7ஆம் அறிவு படத்தின் மூலம் கமல் ஹாசனின் வாரிசாக சினிமாவில் அறிமுகமாகினார் ஸ்ருதி. பின்னணி பாடகியாகவும் பல படங்களின் பாடலுக்கு குரல் கொடுத்து வந்தார்.

இதையடுத்து, விஜய், அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். நடிகர் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தின் தோல்விக்கு பிறகு தமிழ் படம் ஒன்றிலும் கமிட்டாகாமல் வருகிறார். இதற்கு காரணம் வெப் தொடர்களின் வாய்ப்புகள் அதிகரித்தது தான்.

அதேசமயம் டூடுல் கலைஞர் சாந்தனுவுடன் காதலில் இருந்து டேட்டிங்கில் இருந்து வருகிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்கள்.

இந்நிலையில் திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசன் அப்படி இன்று வரையில் யோசிக்கவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார். இந்த கேள்வி சாந்தனுவிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், நாங்கள் இருவரும் கிரியேட்டிவாக திருமணமானவர்கள். எங்களுடைய உறவு மிகவும் உறுதியானது.

புதிய விஷயங்களை எங்கள் தொழிலில் செலுத்தி வருகிறோம். அதை பல முறை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக புதுமையாக யோசித்து செய்வது எங்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.

திருமணம் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை இனிவரும் காலங்களில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.