கமல் ஹாசன் மகளுக்கு என்ன ஆச்சி? ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட வீடியோ..

Kamal Haasan Shruti Haasan Indian Actress
By Edward Jul 06, 2022 05:52 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கமல் ஹாசன் மகளாக 3 மற்றும் 7 ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் ஸ்ருதி ஹாசன். பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தார்.

சமீபத்தில் தன் காதலர் சாந்தனுவுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வரும் ஸ்ருதி அவருடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டும் வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பதிவில், பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் பிரச்சனையை நான் தற்போது எதிர்கொண்டு வருகிறேன்.

உடல்நிலை தற்போது சரியாக இல்லை, ஹார்மோன் எண்டோமெட்ரியோசிஸ் வந்ததால் சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை பெண்கள் அறிவார்கள். இதற்கு ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் இதை சிலர் ஸ்ருதிஹாசனுக்கு மோசமான உடல்நிலை என்று பலவிதமான வதந்தி செய்திகளை பரப்பி வந்துள்ளனர். இதற்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன், நான் மோசமான நிலைமையில் இருப்பதாக வதந்திகள் பல பரவி வருகிறது.

ஆனால் அப்படியொன்றும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.