சின்ன வயசிலே இப்படியா! அஜித் படத்தில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட வீடியோ..
தமிழ் சினிமாவில் கடந்த 60 ஆண்டுகால வாழ்க்கையை தற்போது வரைக்கும் எதுவும் குறையாமல் நடித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். குழந்தை நட்சத்திரமான அறிமுகமாகி உலக நாயகனாக திகழ்ந்து தனக்கு அடுத்து தன் இரு மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசனையும் அறிமுகப்படுத்தி முன்னணி நடிகைகளாக்கினார்.
தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் ஸ்ருதி ஹாசன் பின்னணி பாடகியாக அறிமுகமாகினார். பின்னர், 3 மற்றும் 7ஆம் அறிவு படத்தில் நடிகையாக ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ருதி வெப் சீரிஸ் படங்களில் தாராளமாக க்ளாமர் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில் தான் சிறு வயதில் ஒரு படத்தில் பாடல் பாடியவாறு நடித்திருக்கும் வீடியோ தான் அது. அது வேறயாருடைய படமுமில்லை, தல அஜித் மற்றும் விக்ரம் இணைந்து நடித்து உல்லாசம் படத்தில் தானாம்.
சிறு வயதுல் தந்தை அறிமுகப்படுத்திய சில வேடங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் உல்லாசம் படஹ்த்டில் வாலிப வாழ்க்கை என்ற பாடலை பாடியும் உள்ளார். தற்போது இதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.