படுகேவலமான கேள்விகளை கேட்ட ரசிகர்கள்!! மகள் ஸ்ருதி ஹாசன் கொடுத்த பதிலடி
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாகவும் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.
அதன்பின் சாந்தனு என்பவருடன் லிவ்விங் ரிலேஷனில் இருந்து தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது பல படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், கிடைக்கும் நேரத்தில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்து ஸ்ருதி ஹாசனிடம் சிலர் எல்லைமீறிய கேள்விகளை கேட்டு முகம் சுளிக்க வைத்துள்ளனர்.
நீங்கள் Virgin-ஆ என்ற கேள்வியை கேட்டவருக்கு ஒழுங்காக அந்த வார்த்தைக்கு ஸ்பெல்லிங் தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் மது அருந்துவது பற்றி கேட்டதற்கு, நான் குடிப்பதில்லை, ஆல்கஹால் இல்லாத பீர் குடிப்பேன் என்றும் குடிபழக்கமில்லா வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் சிலர் முகம் சுளிக்கும் படியான கேள்விகளை கேட்டதற்கு தயக்கமின்றி ஸ்ருதி ஹாசன் பதிலளித்துள்ளார்.






