அதை வாங்கினால் மறைத்து கொடுக்குறாங்க!! பீரியட்ஸ் பற்றி வெளிப்படையாக பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். விஜய், அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வந்தார். இடையில் சாந்தனு என்பவரி லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் லைவ் சேட்டினையும் பகிர்ந்து வருகிறார்.சமீபத்தில் அளித்த பேட்டியில் மாதவிடாய் நாட்கள் பற்றிய சில விசயங்களை ஓப்பனாக பேசியிருக்கிறார்.
மாதமாதம் ஏற்படக்கூடிய பிரியட்ஸ் வந்தால் பெண்கள் வாங்க செல்ல கடைக்கு சென்றால் பிரவுன் பேப்பரை போட்டு சுற்றிக் கொடுக்கிறார்கள்.
அதில் என்ன தப்பு இருக்கிறது பெண்களுக்கு அடிப்படை தேவையை மறைப்பதன் மூலம் தஙள் மீது ஒரு தாழ்வுமனப்பான்மையை சமுகத்தில் கொடுக்கிறார்கள்.
அதை ஏன் மறைக்க வேண்டும் பீரியட்ஸ் காலத்தில் வலி ஏற்படும்போது சாதாரணமானது தான் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியும் உடல் நல பிரச்சனை வந்தால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
அதனால் வலி ஏற்படலாம், அது அப்படி தான் இருக்கும் என்று கூறி பெண்களை முடக்கி வைப்பது பைத்தியக்காரத்தனம் என்று கூறியிருக்கிறார்.