நடுவிரலை காட்டிய கமலின் மகள் - வைரலாகும் புகைப்படம்
இசையமைப்பாளர், நடிகை, பாடகி என பன்முகம் கொண்டவர் நடிகை ஸ்ருதி ஹாசன். உலகநாயகன் கமலின் மூத்த மகளான இவர், 2011 -ஆம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் வெளியான "ஏழாம் அறிவு" மற்றும் 3 போன்ற படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பின்னர், இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சலார், வீர சிம்ம ரெட்டி, வால்டர் வீரய்யா போன்ற பிரம்மாண்ட படங்களை லைன் அப் வைத்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

நடுவிரல்
நடிகை ஸ்ருதி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் இணையத்தில் பதிவிடும் புகைப்படங்கள் சில சமயங்களில் வைரலாகும்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் வெளிநாட்டில் தன் நண்பர்களுடன் சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்து வருவதை போன்று சமீபத்தில் நடுவிரலை காட்டி போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் இரட்டை வசனத்தில் பேசி வீடியோவையும் பகிர்ந்துள்ளார். தற்போது அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
