தந்தையின் பேச்சை மதிக்காத ஸ்ருதி.. அந்த மாதிரி செய்ய வேண்டாம்னு சொன்ன கமல்
நடிகர், இயக்குனர், பாடகர், கதை ஆசிரியர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் உலகநாயகன் கமல் ஹாசன். இவரின் மகள் ஸ்ருதி ஹாசனும் பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ருதி ஹாசனிடம் தொகுப்பாளர் உங்கள் தந்தை கமல் ஹாசன் பேச்சை கேட்காமல் இருந்திருக்கிறீர்களா? என்று கேட்டர்.
அதற்கு பதில் அளித்த ஸ்ருதி ஹாசன், " சிறுவயதில் நானும் மற்ற குழந்தைகள் போல தான் இருந்தேன். என்னை என் அப்பா மழையில் நனையாதே, சுவிட்ச் பாக்சில் கை வைக்காதே என்றெல்லாம் கூறுவார். நான் அவரிடம் ஏன் அப்படி செய்ய கூடாது என்று திரும்பித் திரும்பி கேள்வி கேட்பேன். என்னுடைய அப்பா சொல்லி நான் எதையும் கேட்டதில்லை" என்று கூறியுள்ளார்.