எதாவது ஒரு முடிவுக்கு வாங்க அர்ஜுன் சார்? ரோஜா சீரியல் நடிகரால் கொந்தளித்த ரசிகைகள்..
பிரபல சன் தொலைக்காட்சி சேனலில் கடந்த 2018ல் ஆரம்பித்த சீரியல் ரோஜா. முன்னணி நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரியளவில் வெற்றி பெற்ற இந்த சீரியல் தற்போது புது பரிமானத்தில் இயக்குனர் தனுஷ் இயக்கி அமைத்து வருகிறார்.
சிப்பு டூ அர்ஜூன் சார்
1163 வது எபிசோட்டினை தாண்டி சாதனை படைத்து வரும் இந்த சீரியல் டிஆர்பி-யில் மிகப்பெரிய இடத்தினை பெற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் பெற்று வருகிறது. தற்போது ரோஜாவாக நடிகை பிரியங்கா நல்காரியும் கதாநாயகனாக அர்ஜுன் சார் கதாபாத்திரத்தில் நடிகர் சிப்பு சூர்யனும் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இந்த சீரியலில் நடித்தவர்கள் பல விருதிகளை பெற்று வருகிறார்கள்.
விலக முடிவு
அந்தவகையில் சமீபத்தில் நடந்த ஒரு தனியார் விருது விழாவில் அர்ஜுன் கதாபாத்திரத்துக்கும் விருது வழங்கப்பட்டது. அதிக ரசிகை பட்டாளத்தை கொண்ட சிப்புவுக்கு ஒரு ரசிகை செய்த செயல் அவரை அழவைத்தது. இந்நிலையில் ரோஜா சீரியலில் இருந்து சில காரணங்களால் விலகவுள்ளேன் என்று சிப்பு ஆர்யன் ஒரு அறிக்கையை அறிவித்திருந்தார்.
இதை கேள்விபட்ட ரோஜா சீரியல் ரசிகர்கள் அந்த முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கெஞ்சி பல வீடியோக்களையும் இணையத்தில் கருத்துக்களை கூறி வந்தனர். இதனால் தன் ரசிகர்களுக்காக இந்த முடிவினை மாற்றிக்கொண்ட சிப்பு மீண்டும் ரோஜா சீரியலில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
