படவாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு ஓடும் சங்கர் பட நடிகர்! அப்படி என்ன ஆச்சி இவருக்கு!!
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். 5 நடிகர்களை கொண்டு இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
கதாநாயகனாக சங்கரால் அறிமுகம் செய்யப்பட்டவர் சித்தார்த். இப்படத்திற்கு பிறகு மணிரத்னத்தில் ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி போன்ற தமிழ் படங்களிலும் தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இதன்பின் ஜிகர்தண்டா, காவியத்தலைவன், ஜில்ஜங்ஜக், அரண்மனை 2, அவள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பு தவிர ஆங்கில படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்-ஆகவும் திகழ்ந்து வந்த சித்தார்த், இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்குவார்.
சமீபத்தில் மொழி பற்றியும் பாஜக ஆட்சியை பற்றியும் சர்ச்சையாக பேசி சிக்கினார். தற்போது படவாய்ப்புகள் குறைய எஸ்கேப் லைவ் வெப் சீரிஸ் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.