இனி நமக்கு சினிமா சரிப்பட்டு வராது.. மூட்டை கட்டி கிளம்பிய சித்தார்த்

Siddharth
By Kathick May 17, 2022 08:30 PM GMT
Report

பாய்ஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்தார்த். தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சமீபகாலமாக நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

சமீபத்தில் இவர் திரைப்படத்துறையிலிருந்து விலகப்போவதாக தெரிவித்திருக்கிறார். தனக்காக நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில், தற்போது இனியும் இந்த நிலை தொடர்ந்தால் திரையுலகில் இருந்து விலகி வேறொரு தொழில் செய்யும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால், சித்தார்த்தின் ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு ஷாக்காகியுள்ளார்கள்.