40 வயதான சிம்பு உடன் திருமணமா.. உறுதிப்படுத்திய நடிகை சித்தி இத்னானி
கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தி இத்னானி.
முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . இப்படத்தை தொடர்ந்து ஆர்யாவுக்கு ஜோடியாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சித்தி இதனானி இடம், சிம்புவும் நீங்களும் காதலிக்கிறீர்களா? அந்த மாதிரியான தகவல் பரவுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது.
பதில் அளித்த சித்தி இதனானி, சமூக வலைத்தளங்களில் மற்றும் பத்திரிகைகளில் வரும் கிசுகிசு பத்தியெல்லாம் நான் யோசிக்க மாட்டேன். சினிமாவிற்கு வந்துவிட்டால் இதுபோன்று பேச தான் செய்வார்கள்.
இந்த கிசு கிசுவெல்லாம் படிக்க நல்லா இருக்கும். ஆனால் அதை மனதில் மைண்ட்ல ஏத்திடக் கூடாது என்று சித்தி இதனானி கூறியுள்ளார்.