அவ்வளவு அடிவாங்கி இருக்கேன்.. திருமணம் குறித்து நடிகர் சிம்பு இப்படி சொல்லிட்டாரே!

Silambarasan Tamil Cinema Marriage Tamil Actors
By Bhavya Dec 09, 2025 07:30 AM GMT
Report

சிம்பு

நடிகர் சிம்பு கைவசம் தற்போது எஸ்.டி.ஆர் 49, அரசன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

சிம்பு திருமணம் குறித்து பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்த வண்ணம் இருக்கும்.

அவ்வளவு அடிவாங்கி இருக்கேன்.. திருமணம் குறித்து நடிகர் சிம்பு இப்படி சொல்லிட்டாரே! | Silambarasan Open Talk About Marriage Details

அடிவாங்கி இருக்கேன்

இந்நிலையில், சிம்பு அவரது திருமணம் குறித்து பதில் கூறியுள்ளார்.

அதில், "திருமணம் நடக்கும்போது நடக்கும். தனியா இருக்கிறதும், யாரோட இருக்கிறதும் மேட்டர் கிடையாது. நீங்க ஒழுங்கா, நிம்மதியா இருக்கீங்களா என்பதுதான் மேட்டர்.

சந்தோஷமா இருக்கீங்களா? நாலு பேரை நிம்மதியா பார்த்து கொள்கிறீங்களா? அது போதும். நான் இப்போது இப்படி பேச காரணமே ரொம்ப வாழ்க்கையில் அடிவாங்கி இருக்கேன்" என தெரிவித்துள்ளார்.