எப்படி இருந்த நா, இப்படியாகிட்டே, உடல் எடை குறைந்த ரகசியத்தை வெளியே சொன்ன STR

simbu maanaadu body transfermation
By Kathick Nov 22, 2021 11:30 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிம்பு. இவருடைய நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மாநாடு படத்திற்காக 27 கிலோ உடல் எடையை குறைத்து கம்ப்ளீட் தனது லுக்கை மாற்றி நடித்திருக்கிறார் சிம்பு. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை குறித்து தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பெட்டியில் முதல் முறையாக பகிர்ந்திருக்கிறார் சிம்பு.

அவர் கூறியதாவது : உடல் எடையை குறைப்பதற்காக 2 மாதங்கள் முழுவதும் நீர் ஆகாரம் மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டதாகவும் solid உணவு வகைகளை உட்கொள்ளவில்லை என்றும் பல சிரமங்களை தாண்டி வந்ததால் தான் இங்கு இந்த இடத்தில் இப்படி ஒரு தோற்றத்தில் இருப்பதாக கூறியுள்ளார் சிம்பு.